Thursday, July 5, 2012

Sensual truths and reasons

பகுத்தறிவது நன்று அன்று
என்றாலும் பகுத்தே ஓடும் இவ் வாழ்வியலின் ஒவ்வொரு நித்தமும்
தன் மேல் வருடும் நாற்றத்தை உதிர்தேடுகும் மென் நாசி;
தொடும் விசையை பிரித்துணரும் என்பு தோல் போர்த்தும் மேனி -
அரு சுவை ஆழ்ந்து உணரும் நன் நாவு - பல
நிறம் தனை செவ்வனே பகுக்கும் அக கண்கள்;
இவை அனைத்தும் நெறியுடன் இருப்பின் - எதிரே
நிற்கும் அனங் அவள் மன திண்மம் அளவாது புரியாதே - விளிக்கும்
நெறியற்ற நேர் தவறும் -
மன கண்கள் !
தன் நிலை அறிந்து .......கலங்கும் அகத்தின் கண்கள் குலமென.

இதில் நெறி ஒன்றே நிறை அன்று
இவை அனைத்தும் தவறும் நெறி மேல் பழியன்று
நினைத்தை எப்படியும் நடத்த நினைக்கும் மனம்
தன் பழிக்கு அஞ்சா பாதகம் செய்திடவே
இம் மனதிற்கு ஒலி ஒளியாய் நற்குனமாய்
நின்ற ஐம்புலன்களும் தோல்வியில் தோயுமே
தன் நிலை மாறுமே உன் நிலை மாற்றுமே - நீங்கா
நிலைக்குள்.

No comments: